February 21, 2017
எண்ணெய்க் கசிவை சுத்தம் செய்த பணியாளர்கள் உடல்நலம் பாதிப்பு! மருத்துவ குழு பகீர் ரிப்போர்ட்!
கடந்த மாதம் சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு வந்த இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கொட்டியது.
இதனால் எண்ணூர் துறைமுக பகுதி முழுவதும் கச்சா எண்ணெய் படலமாக காட்சியளித்தது. மேலும் கடல்வாழ் உயிரினங்கள் பல பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் எண்ணெய்க் கசிவினை சுத்தம் செய்ய வந்தவர்களுக்குக் கையுறை, பூட்ஸ் போன்ற எந்தத் தற்காப்புக் கவசமும் வழங்கப்படவில்லை. பொதுவாக எண்ணெய்க் கசிவை ரசாயணப் பேரழிவுப் பயிற்சி பெற்ற பணியாளர்கள் மட்டுமே சுத்தப்படுத்த வேண்டும்.
ஆனால், சென்னை கடற்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவை சுத்தம் செய்தவர்கள் எந்தவிதப் பயிற்சியும் பெறாதவர்கள்.
தற்போது எண்ணெய்க் கசிவை சுத்தம் செய்த பணியாளர்கள், மீனவர்கள், அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் சுகாதாரம் பற்றிய விரிவான ஆய்வறிக்கையை மூன்று பேர் கொண்ட மருத்துவர்கள் குழு இன்று வெளியிட்டிருக்கிறார்கள்.
மருத்துவக்குழு ஆய்வறிக்கையில் ‘‘எண்ணெய்க் கசிவை சுத்தம் செய்தவர்களில் பலருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எண்ணெய்க் கசிவை சுத்தம் செய்த பணியாளர்கள் உடல்நலம் பாதிப்பு! மருத்துவ குழு பகீர் ரிப்போர்ட்!
Reviewed by மறத்தமிழன்
on
February 21, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.