February 9, 2017
முதல்வர் ஓபிஎஸ் உடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே. ராஜேந்திரன் ஆலோசனை
முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கிரீன்வேஸ் சாலையில் வசித்து வருகிறார். அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டாலும் காபந்து முதல்வராக இருக்கிறார். தலைமைச் செயலகத்திற்கு செல்லாமல் தனது பணிகளை வீட்டில் இருந்தே கவனித்து வருகிறார் ஓ.பன்னீர் செல்வம்.
முதல்வர் ஓபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இடையே கடும் போர் நிலவி வருகிறது. கடந்த இரு தினங்களாக அவர் தலைமைச் செயலகம் செல்லவில்லை. எராளமான முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். இந்த நிலையில் முதல்வருடன் அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இன்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.
ராஜேந்திரன் ஆகியோர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு நேரில் வந்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
விசாரணை கமிஷன் அமைப்பது தொடர்பாகவும், சென்னை கலவரம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்தி வருவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஓபிஎஸ் உடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே. ராஜேந்திரன் ஆலோசனை
Reviewed by மறத்தமிழன்
on
February 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.