February 20, 2017
காணாமல் போன பெண் குழந்தை சடலமாக கண்டெடுப்பு!
எர்ணாவூரில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டு குப்பை லாரியில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் மீனவர் பழனி. இவரது மனைவி ராணி. இவர்களது 3 வயது மகள் ரித்திகா. வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ரித்திகாவை திடீர் என காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் குப்பை லாரி ஒன்றில் 3 வயது குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. சடலமாக கிடப்பது தனது காணாமல் போன மகள் என்பதை அறிந்ததும் பெற்றோர் கதறி அழுதனர்.
காணாமல் போன குழந்தையை சடலமாக பார்க்கும் பெற்றோரின மனநிலையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
மாநகராட்சி ஊழியர்கள் எர்ணாவூர், எண்ணூர் பகுதிகளில் சேகரித்த குப்பையை வாகனம் மூலம் சேகரித்து திருவொற்றியூர் கரிமேடு அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டியபோது மாயமான சிறுமி ரித்திகா வாயில் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
குழந்தையின் பின்தலையில் காயம் இருந்துள்ளது. அந்த குழந்தையின் கொலுசு உள்ளிட்டவைகள் அருகில் இருக்கும் அடகு கடையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
பெண் பிள்ளையை பெற்றவங்க மனசு இப்ப என்ன நிலைமை என்று உணர வேண்டும்... அந்த காலத்தில் வயிற்றில் நெருப்பை கட்டிக் வேண்டும் பெண்ணை பெற்றால் என்பார்கள். அவை அவ்வளவும் மூட நம்பிக்கையாக பார்க்கப்பட்டது. ஆனால் உண்மையில் நெருப்பாய் வெந்து சாக வேண்டிய நிலை. மூன்று வயது குழந்தையாக இருந்தாலும்....... வார்த்தைகள் இல்லை.
3 வயதோ 7வயதோ இரண்டுமே குழந்தைதான். குழந்தைகளின் மீது பாலியல் வன்முறை செய்கிற அளவுக்கு மனநோய்க்கூறு கொண்ட மனிதர்களை உருவாக்கியிருக்கிற நமது சமூக ஒழுக்க மதிப்பீடுகள் களையப்பட வேண்டும்
பெண் உடலை நுகர் பொருளாக பார்க்கிற ,மனநோய் பாதிக்கப்பட்ட மனிதர்களால்தான் இந்த பிஞ்சுகளை வன்புணர்தல் சாத்தியம் . இனியாவது இந்த பார்வைகளை மாற்றும் சிந்தனைகளை முன்னெடுப்போம். மரண தண்டனை தான் தீர்வு என்கிற அபத்தங்களை புறம்தள்ளி மாற்று மதிப்பீடுகளை உருவாக்குவோம்.
காணாமல் போன பெண் குழந்தை சடலமாக கண்டெடுப்பு!
Reviewed by மறத்தமிழன்
on
February 20, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.