Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 3, 2017

டாக்டர் இல்லை, நீங்களே பிரசவம் பார்த்துக்கொள்ளுங்கள்: கர்ப்பிணியை திருப்பி அனுப்பிய அரசு மருத்துவமனை


காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் கர்ப்பிணியை வீட்டிற்கு திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ இவர் நிறைமாத கர்ப்பிணியாக அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த ஊழியர்கள், டாக்டர்கள் தற்போது மருத்துவமனையில் இல்லை. நீங்கள் வீட்டிற்கு சென்று பிரசவம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சுபஸ்ரீயை உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துசென்று பிரசவம் பார்த்தபோது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை சில மணிநேரத்தில் உயிரிழந்துவிட்டது.

இந்நிலையில், உறவினர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு, சரியாக பிரசவம் பார்ப்பதற்கு டாக்டர்கள் இருந்திருந்தால் குழந்தை இறந்திருக்காது என்று மருத்துவமனை மீது குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.