அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நாளை முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்பு விழா சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் அங்கு துரிதமாக செய்யப்பட்டு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா நேற்று நடைபெற்ற அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இவர் 9ஆம் தேதிக்குள் முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியானது.
ஓ.பன்னீர்செல்வமும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறும் நிகர்வுகளால் தமிழக அரசியல் சூழலில் பரபரப்பு நிலவி வருகிறது.
சசிகலாவுக்கு அதிமுகவினர் போர்க்கொடி
சசிகலா முதல்வராக பல்வேறு கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களுக்கு சம்பந்தமே இல்லாத சசிகலா முதல்வராக கூடாது என்று அதிமுகவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
சசிக்கு எதிராக போராட்டம்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க வேண்டும் என பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நடப்பது நடக்கட்டும் நாளையே பதவியேற்பு?
இந்நிலையில் நடப்பது நடக்கட்டும் என சசிகலா நாளையே பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை பதவியேற்பார் என கூறப்படுகிறது.
இன்று இரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
இதற்காக விழா மண்டபத்தில் உள் அலங்காரப் பணிகள் புயல்வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு வெளியாகும் என கூறப்படுகிறது.



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.