Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 5, 2017

சசிகலா முதல்வரானவுடன் பொறுக்கிகள் மீது நடவடிக்கை…. சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் கருத்து


அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஒப்புதலை பெற்ற பிறகு திங்கட்கிழமை(பிப்.6) அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில்,“வரும் திங்கட்கிழமை சசிகலா முதல்வராக பதவியேற்று கொண்டால் அவர் பொறுக்கிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி  தனது, ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பொறுக்கிகள் என்று குறிப்பிட்டு வருகிறார். ஆனால் இதுவரை அவர் யார் பொறுக்கிகள் என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.