Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 19, 2017

ஜெ.,வின் அப்போலோ மர்மம் அவிழ்கிறதா? ஆளுநரின் புத்தகம் வெளியீடு


மகாராஷ்டிரா ஆளுநராக இருந்துவரும் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவுக்கு பதவிக்காலம் முடிந்த நிலையில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, அவரின் மரணமடைந்தது வரையில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

அதேபோல், முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றது முதல், ஜல்லிக்கட்டு போராட்டம், சசிகலா முதல்வராக பதவியேற்க கோரியது, தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவிப்பிரமாணம் செய்துவைத்து மற்றும் தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடந்த ரகளை வரையிலான நடவடிக்கைகள் குறித்தும் எவ்வாறெல்லாம் பிரச்சனைகள் சமாளிக்கப்பட்டது குறித்து புத்தகமாக வெளியிட இருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவின் இந்த புத்தகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை மற்றும் சாவிலுள்ள மர்மங்கள் அவிழுமா? என மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.