Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 18, 2017

சபாநாயகர் மைக் உடைப்பு... சட்டசபை ஒத்திவைப்பு


சிறப்பு சட்டசபைக்கூட்டம் பெரும் அமளியுடன் தொடங்கியது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஓபிஎஸ் அணி, திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டுஅமளியில் ஈடுபட்டனர். சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

பரபரப்பான சூழ்நிலையில் சிறப்பு சட்டசபைக்கூட்டம் இன்று காலை கூடியது. சபை கூடியதற்கான காரணம் பற்றி சபாநாயகர் விளக்கம் அளித்தார். தொடர்ந்து முதலில் யார் பேசுவது என்பதில் அமளியும் குழப்பமும் ஏற்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் அணி, திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். சட்டசபையை ஒத்திவைத்து சபாநாயகர் வெளியேறினார்

தமிழக சட்டசபையில் கிட்டதட்ட 28 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை சட்டசபையில் நிரூபிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

சட்டசபை இன்று கூடிய உடன் சபாநாயகர் தனபால் சபை கூடியதற்கான காரணத்தை விளக்கினார். இதனைத் தொடர்ந்து முதலில் யார் பேசுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. செம்மலை பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் கோரினர்.

பெரும் அமளிக்கு இடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானித்தை முன்மொழிந்தார். சட்டசபையின் கதவுகள் மூடப்பட்டன. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுகவும், ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களும் முழக்கமிட்டனர்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு ஓபிஎஸ் அணியின் கொறடா செம்மலை கோரிக்கை வைத்தார். அவர்களுக்கு ஆதரவாக திமுகவினர் முழக்கமிட்டனர். உறுப்பினர்கள் அமைதிகாக்குமாறு சபாநாயகர் தனபால் கோரிக்கை வைத்தார்.

எனினும் ஓ. பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களும், ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களும் முழக்கமிட்டனர். வேண்டும் வேண்டும் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று முழக்கமிட்டவாறே சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். சில எம்எல்ஏக்கள் இருக்கை மீது ஏறி நின்று முழக்கமிட்டனர்.
சட்டசபை இருக்கைகளை தட்டி எதிர்கட்சியினர் கடுமையாக ரகறை செய்தனர். இதனயைடுத்து சட்டசபையில் இருந்து சபாநாயகர் வெளியேறினார். எதிர்கட்சியினர், ஓபிஎஸ் அணியினரின் ரகளையால் சட்டசபை கடும் அமளிதுமளியானது.

சபாநாயகர் மைக் உடைக்கப்பட்டது. சட்டசபை ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.