February 15, 2017
பரிசோதனையின் போது குழந்தை கால்களால் உதைத்தற்காக செருப்பினால் அடித்து, உதைத்து கோபத்தை தீர்த்த மருத்துவர்
மொறட்டுவை பிரதேசத்தில் தன்னிடம் சிகிச்சை பெறுவதற்காக அழைத்துவரப்பட்ட மூன்று வயது குழந்தை ஒன்றை, அவரது தாய் மற்றும் பாட்டி முன்னிலையிலேயே காலால் உதைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வைத்திய ஒருவர் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீரென மயங்கி வீழ்ந்து, வாந்தி ஏற்பட்டதன் காரணமாக இக்குழந்தையை அவரது தாயும் பாட்டியும் மொரட்டுவையிலுள்ள வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
தன்போது குறித்த குழந்தையை வைத்தியர் பரிசோதித்து கொண்டிருந்தபோது, பரிசோதனையில் ஈடுபட முரண்டுபிடித்து அக்குழந்தை வைத்தியரை இருதடவைககள் காலால் உதைத்துள்ளது.
இதனால் கோபமடைந்த வைத்தியர், தனது ஆசனத்திலிருந்து எழுந்து குழந்தையை உதைத்ததுடன் குழந்தையின் தாயின் முன்னே வைத்து அதனை பாதணியை கொண்டும் தாக்கியுள்ளார்.
தனையடுத்து தாயும் பாட்டியும் குழந்தை அழைத்துச்சென்று இது தொடர்பில் குறித்த வைத்தியருக்கு எதிராக மொரட்டுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இம்முறைப்பாட்டுக்கமைய குற்றஞ்சாட்டப்பட்ட வைத்தியர் மொரட்டுவை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, தான் குழந்தையை தாக்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.
பின்னர் குழந்தையின் தாயினது வேண்டுகோளுக்கமைய இருதரப்பினரும் இணக்கத்துக்கு வந்துள்ள நிலையில் குழந்தையை தாக்கிய வைத்தியரை. மொறட்டுவை பொலிஸார் கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.
பரிசோதனையின் போது குழந்தை கால்களால் உதைத்தற்காக செருப்பினால் அடித்து, உதைத்து கோபத்தை தீர்த்த மருத்துவர்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 15, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.