Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 26, 2017

மத்திய அரசு கொண்டுவரும் திட்டத்தை சில சமூக விரோதிகள் எதிர் கின்றனர் - எச். ராஜா சர்மா


புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ஊர்மக்கள் மற்றும் விவசாயிகள், மாணவர்கள் என பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 11 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்தை தமிழகத்தில் ஒரு சில சமூக விரோதிகள் எதிர்த்து வருகின்றனர்.

அதேப்போல புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசல் கிராமத்தில் கொண்டு வந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அப்பகுதி மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

இவர்களின் பின்னால் மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சமூக விரோத சக்திகள் தற்போது புதுக்கோட்டையிலும் ஊடுருவியுள்ளது.

மக்களுக்கு பிடிக்காத திட்டம் என்றால் அதனை மத்திய அரசு நிறைவேற்றாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.