Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 18, 2017

சாப்பிட்டாரா ஸ்டாலின்... தயாநிதி மாறனிடம் பரிவுடன் கேட்ட மனைவி துர்கா !


மெரினாவில் கைது செய்யப்பட்டு மயிலாப்பூர் தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார் அவரது மனைவி துர்கா ஸ்டாலின்.

சட்டசபையில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மெரீனாவில் உள்ள காந்தி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். ஈடுபட்டார். உடனடியாக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட துரைமுருகன், ஐ.பெரியசாமி, கனிமொழி, தயாநிதி மாறன், உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து கைதான அனைவரும் மயிலாப்பூர் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். கபாலீஸ்வரர் கோயில் அருகே உள்ள சமுதாய கூடத்தில் அனைவரும் தங்க வைக்கப்பட்டனர். ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்டவர்கள் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அங்கு ஸ்டாலின் மனைவி துர்கா வந்தார். ஸ்டாலினிடம் கையில் எதுவும் காயம் ஏற்பட்டிருக்கிறதா எனக் கேட்டறிந்தார். பின்னர் அருகில் இருந்த தயாநிதி மாறனிடம் ஸ்டாலின் சாப்பிட்டாரான்னு கேட்டார். இதையடுத்து சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டாலினுடன் கைதான திமுகவினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.