Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 5, 2017

குழந்தைகள் உணவில் பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடிய நச்சு தன்மை!


கனடா-PC Organics குழந்தைகளின் உணவு வகைகள் சிலவற்றில் நச்சு தன்மை அச்சுறுத்தல் காரணமாக மீள அழைக்கப்படுகின்றன. President’s Choice உணவுகளான இவற்றை தாய் நிறுவனங்களான அட்லான்டிக் சுப்பர்ஸ்ரோஸ், Loblaw நிறுவனங்கள் ஆகியன அவைகளின் PC பிரான்ட் அப்பிள், புளுபெரி & பச்சை பட்டாணி கலந்த குழந்தை உணவுகளில் நச்சுத்தன்மை அச்சுறுத்தல் காரணமாக மீள அழைக்கப்படுகின்றன. இந்த உணவு வகைகளில் “அதிக ஆபத்து” உள்ளதாக கனடிய உணவு பரிசோதனை ஏஜன்சி சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 128-மில்லி லிட்டர்கள் கொண்ட அக்டோபர் 31, 2017 காலாவதி முத்திரை கொண்ட பக்கெட்டுக்களை உபயோகிக்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றது. இவைகளில் கிளாஸ்டிரியம் நச்சேற்றம் உற்பத்தி செய்யும் பக்டீரியா சேர்ந்திருக்கலாம் என கருதப்படுவதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த உணவு கனடா பூராகவும் உள்ள Loblaw கடைகளில் விற்கப்பட்டுள்ளது. UPC குறியீடு 0 60383 06292 7, கொண்ட கொள்கலன்களை வெளியே எறிய அல்லது வாங்கிய கடைகளில திரும்ப கொடுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. கிளாஸ்டிரீயம் கடுமையான ஒரு நோய். தசை பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடியது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.