Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 8, 2017

மன்னார்குடி கோஷ்டிக்கு பெப்பே காட்டிய மணப்பாறை எம்.எல்.ஏ சந்திரசேகர்


சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி கோஷ்டிக்கு நெஞ்சுவலி என்று கூறி பெப்பே காட்டியுள்ளார் மணப்பாறை எம்.எல்.ஏ .

எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு வந்த மணப்பாறை சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ சந்திரசேகர் நெஞ்சு வலி என்று கூறி எஸ்கேப் ஆகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா மீது முதல்வர் ஓபிஎஸ் சராமரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததை அடுத்து இன்று அவசர எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

ஓபிஎஸ் பக்கம் எந்த எம்.எல்.ஏக்களும் சென்று விடக்கூடாது என்பதற்காக நேற்று இரவில் இருந்தே கண்காணிப்பில் இருந்தனர். ஸ்டார் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அங்கிருந்து நேரடியாக, தலைமை அலுவலகம் அழைத்துவரப்பட்டனர். எம்எல்ஏக்கள் அனைவரும் கடும் கெடுபிடியுடன் நடத்தப்பட்டனர். செல்போன்களும் கூட கண்காணிக்கப்பட்டன. இதற்கு பலர் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மணப்பாறை தொகுதி உறுப்பினர் சந்திர சேகர், கூட்டம் அதிகமாக உள்ளதால், நெஞ்சு படபடப்பாக வருகிறது எனக் கூறிவிட்டு, வெளியே சென்றுள்ளார். தலைமை அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவர், அப்படியே எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு 131 பேர் வந்துள்ளதாக கூறினார் செங்கோட்டையன். பின்னர் நட்சத்திர கொறடா அதிமுக எம்.எல்.ஏ 129பேரும் கூட்டணி கட்சியினர் 3 பேரும் ஆதரவு கடிதம் அழைத்தாக கூறினார். கூட்டத்திற்கு வந்தவர்களை எண்ணிப்பார்த்த அதிமுக நிர்வாகிகள், சந்திரசேகரை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர்.
மன்னார்குடி கோஷ்டிக்கு பெப்பே காட்டிவிட்டு எஸ்கேப் ஆன மனப்பாறை எம்.எல்.ஏ சந்திரசேகர் எங்கே என சல்லடை போட்டு தேடிவருகின்றனர். பன்னீர்செல்வத்திற்கு யாரும் ஆதரவு தெரிவித்துவிடக் கூடாது என்பதால், அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா தரப்பினர் கெடுபிடியுடன் நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.