Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 5, 2017

இங்கேயே இருங்க.. எங்கேயும் போகாதீங்க.. அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு


சென்னையை விட்டு வெளியேற வேண்டாம் என்று தனது கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அதிமுக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

சசிகலாவை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுத்துள்ள அதிமுக, தற்போது தனது கட்சி எம்.எல்.ஏக்களை சென்னையிலேயே இருக்குமாறு உத்தரவிட்டுள்ளதாம்.

முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் அகால மறைவைத் தொடர்ந்து சசிகலா படு வேகமாக வெளிச்சத்திற்கு வந்து விட்டார். முதலில் போயஸ் தோட்ட இல்லத்தை சசிகலா குடும்பத்தினர் முழுமையாக பயன்படுத்த ஆரம்பித்தனர். அடுத்து ஜெயலலிதாவின் பொதுச் செயலாளர் பதவியை சசிகலா பிடித்தார். ஜெயலலிதா போலவே கெட்டப்பையும் மாற்றினார். ஜெயலலிதா போலவே நடக்கிறார், போஸ் கொடுக்கிறார், நிறுத்தி நிதானமாக பேசுகிறார்.

இந்த நிலையில் தற்போது ஜெயலலிதா போலவே அழர் வகித்து வந்த முதல்வர் பதவியையும் பிடித்து விட்டார். இன்று கூடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்து விட்டது அதிமுக. தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக இதற்கு எதிராக இருந்தும் கூட தங்களுக்குரிய சட்ட அதிகாரத்தை வைத்து சசிகலாவை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுத்து விட்டனர் அதிமுகவினர்.

இந்த நிலையில் அடுத்தடுத்த வேலைகளில் சசிகலா தரப்பு இறங்கி விட்டது. முதல் கட்டமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னையை விட்டு வெளியேறக் கூடாது என்று தடை போடப்பட்டுள்ளதாம். சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். அவர்களை கண்காணிப்பில் கட்சி மேலிடம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சசிகலா எதிர்ப்பாளர்களால் கட்சி பிளவுபடலாம் என்று ஏற்கனவே செய்திகள் பரவியுள்ள நிலையில் முதல்வராகும் வரை எந்தக் குழப்பமும் வந்து விடக் கூடாது என்பதால்தான் இந்த உத்தரவாம். இதனால் சென்னையிலேயே தங்கியுள்ளனராம் எம்.எல்.ஏக்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.