February 22, 2017
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள், நாம் எங்க இருக்கோம் : யார் மாற்றியது ?
அறிஞர் அண்ணா மக்கள் திலகம் எம்ஜிஆர், தந்தை பெரியார்,கர்மவீரர் காமராஜர்,போன்ற அரசியல் தலைவர்கள் மறைந்த போது நாடே கண்ணீர் விட்டு அழுதது. பலர் துக்கம் தாங்காமல் இன்னுயிரை மாய்த்தார்கள்.
அப்படிப்பட்ட பாசம், அன்பு கொண்ட மாநிலம் நமது தமிழ் நாடு, எவ்வளவு பெரிய விரோதியாக இருந்தாலும் இறந்து விட்டால் ஓடிச்சென்று கலந்துகொள்ளும் பாரம்பரியம் கொண்டது நமது தமிழ் கலாச்சாரம்.
ஆனால் இன்று என்ன நடக்கிறது.? யாரைப் பிடிக்கவில்லையோ அவர்களுக்கு உடனடியாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி விடுகிறோம்.
அதற்கு என்ன அர்த்தம் நீ உயிரோடு இல்லை,செத்துப் போனாய் என்று அர்த்தம், இந்த போஸ்டரை அவர்களின் மனைவி,குழந்தைகள், உறவினர்கள் பார்க்கும் போது எப்படி துடித்துப் போவார்கள்..?
சரி நாம் செய்வது தவறு என்றே வைத்துக் கொள்வோம். போஸ்டருக்குரிய நபர்களின் நடவடிக்கை எப்படி இறுக்கிறது? அதிலும் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் இப்படி நடந்து கொள்ளவேண்டும்,
அதற்கும் நம்மிடையே உதாரண புருஷர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். முன்னாள் மந்திரி கக்கன் போன்றோர் இருந்தார்கள்.
இப்போது தோழர் நல்லகண்ணு இருக்கிறார். ஆனால் இப்பொது ஒரு கவுன்சிலர் கூட பல ஆயிரம் கோடி சொத்துக்கள் சம்பாதித்து விடுகிறார்.
கூவத்தூரில் விலை போன மந்திரி,உறுப்பினர்கள் ஆடிய ஆட்டம், சுயநலம் ஊருக்கே தெரியும்.
இவர்கள் செத்துப் போனவர்கள் என்று முடிவு செய்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டி விடுகிறார்கள்.
நம்மை ஆள்பவர்கள் சரியாக இருந்தால் தமிழன் பாசம் காட்டுவான் என்பதே எதார்த்தம்.
போஸ்டர்கள் ஒட்டாதீர்கள், ஒட்ட வைக்காதீர்கள்.
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள், நாம் எங்க இருக்கோம் : யார் மாற்றியது ?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 22, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.