February 20, 2017
நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த வீடியோ காட்சிகள்.. ஆளுநரிடம் ஒப்படைப்பு
சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புகள் நடந்தது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் பேரவை 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் திமுகவினர் வலுக்கட்டாயமாக அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
திமுகவினர் வெளியேற்றப்பட்டபோது தள்ளுமுள்ளு நடந்தது. அப்போது திமுகவினர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் எதிர்க்கட்சி தலைவர் சட்டை கிழிக்கப்பட்டது.
இது குறித்து ஸ்டாலின் மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் ஆளுநரிடம் புகார் அளித்து இருந்தனர். இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்து சட்ட பேரவை செயலாளர் ஜமாலுதீனிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கேட்டிருந்தார்.
அதன்படி இன்று சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் நேரில் சென்று அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் குறித்து அறிக்கை அளித்தார். மேலும் அன்று நடந்த நிகழ்வுகள் குறித்த வீடியோவையும் சமர்ப்பித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த வீடியோ காட்சிகள்.. ஆளுநரிடம் ஒப்படைப்பு
Reviewed by மறத்தமிழன்
on
February 20, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.