Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 5, 2017

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபைக் குழு தலைவராக சசிகலா தேர்வு.. முதலமைச்சராக பதவியேற்கிறார் சசிகலா


அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சட்டசபைக் குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் முதல் முறையாக கடந்த மாதம் 27-ந் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. மீண்டும் ஒரே வாரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சட்டசபைக் குழு தலைவராக முன் மொழிந்தார். இதனைத் தொடர்ந்து அவர் சட்டசபைக் குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் சசிகலா முதல்வர் ஆவதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்று ஏற்கனவே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இன்று சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் முதல்வர் ஆவதற்கான வழிகள் திறக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே அரசியல் வட்டாரங்களில் கூறியது போன்று பிப்ரவரி 9ம் தேதி தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, போயஸ்கார்டனில் 2 மணி நேரத்திற்கும் மேலாக சசிகலாவுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் ஓபிஎஸ், அமைச்சர்கள், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.