Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 6, 2017

சசிகலா தலைமையை ஏற்பதைவிட செத்துப் போகலாம்! ‘‘புதுவை புரட்சித்தலைவர்’’ அதிரடி!


புதுவையின் “புரட்சித் தலைவர்” என்று கூறும் அளவுக்கு பல புரட்சிகளைப் படைத்தவர் புதுச்சேரி கண்ணன். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
மூப்பனாரின் அன்பைப் பெற்றவர். அவர் இருந்தவரை புதுவை காங்கிரஸில் கோலோச்சி வந்தார். மேலும் புதுச்சேரி மாநில சட்டசபையின் சபாநாயகராகவும், அமைச்சராகவும், பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
இதன் பின்னர் தமிழ் மாநில காங்கிரஸுக்கு மாறினார். அங்கிருந்து வெளியேறி புதுக்கட்சி தொடங்கினார். பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பினார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார் கண்ணன். ஒரு ஆண்டு காலம் அதிமுகவில் கட்சிப்பணியாற்றி வந்தார் கண்ணன்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் சசிகலா பொதுச்செயலாளரான போது கருத்து எதுவும் கூறாமல் மௌனம் காத்து வந்தார்.
இந்த நிலையில் சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கண்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் கண்ணன்.
அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கண்ணன் அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசியலில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் கண்ணன் கடைசியில் சசிகலா முதல்வரானதால் வெறுத்து போய் அதிமுகவில் இருந்தே விலகியுள்ளார்.
இவரது இந்த அறிவிப்பால் புதுவை அதிமுகவினர் அதிர்ச்சியடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.