Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 28, 2017

மதுரை நீதிமன்றத்தில் தனுஷ் ஆஜர்


சென்னை: மேலூர் தம்பதிகள் தொடர்ந்த வழக்கில் நடிகர் தனுஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.
நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என உரிமைக் கோரி மேலூரைச் சேர்ந்த கதிரேசன்(60), மீனாட்சி (55) தம்பதிகள் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ள நிலையில், நடிகர் தனுஷ் தரப்பில் இவ்வழக்கினை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.






இந்நிலையில், இவ்வழக்கின் முந்தைய விசாரணையின்போது, தனுஷ் படித்த கல்விச் சான்றிதழ்களை தனுஷ் மற்றும் கதிரேசன் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டன. இதில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 10ஆம் வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை. கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின் இவ்வழக்கில் நடிகர் தனுஷின் அங்க அடையாளங்களை சரிப்பார்க்க அவரை இன்று(பிப்-28) நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.
இதையடுத்து, இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரான தனுஷின் அங்க அடையாளங்களை சரிப்பார்க்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பதிவாளர் அறையில் தனுஷின் அங்க அடையாளங்களை மருத்துவர்கள் சரிப்பார்த்து இன்று அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். தம்பதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றிதழ்களுடன் தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட வேண்டும் என கூறி இவ்வழக்கை வருகிற மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.