Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 9, 2017

மிரட்டி வாங்கிய என் பண்ணை வீட்டை திருப்பி தா’-சசிகலாவிடம் கங்கை அமரன் அதிரடி!


பழைய மகாபலிபுரம் சாலையில் பையனூர் பக்கம் 22 ஏக்கர் நிலப்பரப்பில் இசையமைப்பாளா் கங்கை அமரனுக்கு ஒரு பண்ணை வீடு உண்டு.
பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டை, அந்தவழி சென்று வந்த சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரனின் கண்ணில் பட, அவ்வளவு தான்.
அவரிடம் அதை வாங்க, முதல்வர் ஜெயலலிதா சந்திக்க விரும்புகிறார் என்று சொல்ல, அவரும் பொக்கெயுடன் போயஸ் தோட்டம் வந்து இருக்கிறார்.
முதலவர் வர, அவரிடம் பொக்கே கொடுக்க, வாங்கிக்கொண்டு முதல்வா் எதுவும் பேசாமல் சென்று விட்டாராம்.
கொஞ்ச நாட்களில், பாஸ்கரன் கங்கையமரனின் வீட்டிற்கு வந்து, வீட்டை விற்க சொல்லி கேட்க, அவர் முடியாது என்று சொல்லி இருக்கிறார். அதன் பின், முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், பாஸ்கரன் ஆகியோர் பதிவாளர் மற்றும் பிற அரசு அதிகாரிகளுடன் வந்து மிரட்டி, தன் பேரில் அந்த வீட்டை பதிந்து கொண்டனராம்.
இதுகுறித்து ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் பேசியவர், இப்போது நிகழ்ந்து வரும் அரசியல் சூழ்நிலையில்,தைரியமாக இன்று, என் வீட்டை திருப்பி தா. நேற்று சசிகலாவிடம் கங்கை அமரன் திருப்பூரில் பத்திரிகை மீட்டில் கேட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.