February 13, 2017
சசிகலாவால் ஓரங்கட்டப்பட்ட தம்பிதுரை – பரபரப்பு பின்னணி!
தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழ்நிலையால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தலைமையில் அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிளவுபட்டது.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இதுவரை 7 எம்.எல்.ஏ.க்களும், 11 எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், அதிக அளவிலான தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சசிகலா அணியில் பெரும்பாலான எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்தே சசிகலா அணியில் முதன்மையான இடத்தில் இருந்துவந்த தம்பிதுரையை கடந்த சில நாட்களாக காண முடியவில்லை. காரணம், அவர் திடீரென ஓரம் கட்டப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்செட் ஆன தம்பிதுரை சசிகலா அணியில் இருந்து சற்று விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், தம்பிதுரை துணை சபாநாயகர் பொறுப்பில் இருந்தும், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சசிகலா பிரதமரை நேரில் சந்தித்து அளிக்கச் சொன்ன கடிதங்களை அவரால் கொடுக்க முடியவில்லை. அதனால் சசிகலா அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், தங்களது கட்டுப்பாட்டில் அமைதியாக இருந்த பன்னீர்செல்வத்தை, தொடர்ந்து சீண்டி அவரை கட்சியை விட்டு வெளியே செல்ல தூண்டியதில் தம்பிதுரைக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
இந்த நிலையில், செங்கோட்டையனுக்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் பதவி வழங்கப்பட்டதால் தம்பித்துரை மிகுந்த விரக்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தம்பித்துரை தாமாகவே கட்சியின் தீவிரப் பணிகளில் இருந்து ஒதுங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சசிகலாவால் ஓரங்கட்டப்பட்ட தம்பிதுரை – பரபரப்பு பின்னணி!
Reviewed by மறத்தமிழன்
on
February 13, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.