Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 27, 2017

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… ஓட ஓட வெட்டிக்கொலை!


மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் தனது மனைவியை ஓட ஓட வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு அருகே உள்ள  களம்பூர்–இலுப்பைகுணம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் கென்னடி கூலி வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமதி  என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹனிஷ் என்ற 5 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் கணவன், மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. வழக்கம்போல நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஜஸ்டின் தனது மனைவியை கத்தியால் வெட்டினார். அவரிடமிருந்து தப்பித்து வெளியே ஓடிய சுமதியை ஜஸ்டின் ஓட, ஓட விரட்டி வெட்டினார். இதில் சுமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஜஸ்டின்கென்னடியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.