தமிழக முதல்வராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.கே சசிகலாவிற்கு பதவி மேல் ஆசை கிடையாது என்று சி.ஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலா நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க இருப்பதை,தமிழகம் முழுவதிலும் உள்ள அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக வின் செய்தி தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி, ஒரு பெண் இருந்த இடத்திற்கு இன்னொரு பெண் வந்திருக்கிறார்.
1991-ஆம் ஆண்டு அம்மா தமிழக முதல்வராக பதவியேற்றதிலிருந்து,பெண்களுக்காக பல பிரத்யேக நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
அன்னை தெரசா பாராட்டும் அளவிற்கும் பெண்களுக்காக பல நலத்திட்டங்களை அம்மா தீட்டினார்.
சின்னம்மாவிற்கு பதவி ஆசை என்பதே கிடையாது தற்போது கூட கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான்,தமிழக முதல்வராக தன்னை தேர்ந்தெடுக்க சின்னம்மா ஒப்புக் கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.