February 13, 2017
மக்கள் கருத்துக் கேட்பு பாதியில் நிறுத்தம்… தமிமுன் அன்சாரியை மிரட்டியது யார்?
தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று நாகை தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி நடத்திய கருத்துக் கேட்பு பாதியில் திடீரென்று நிறுத்தப்பட்டது.
நாகை தொகுதி எம்எல்ஏவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி, தொகுதி மக்களின் கருத்தைக் கேட்க தனது அலுவலகத்தில் கருத்துப் பெட்டி ஒன்றை வைத்தார். மக்கள் தங்களது கருத்துக்களை சொல்ல ஒன்று கூடிய போது, திடீரென்று பாதியில் நிறுத்தப்பட்டது.
அதிமுகவின் பிளவு ஏற்பட்டுள்ளதால் தமிழக முதல்வராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதா அல்லது அதிமுகவின் பொதுச் செயலாளராக இருக்கும் சசிகலாவை ஆதரிப்பதா என்று தொகுதி மக்களிடம் கருத்துக் கேட்புக்கு நாகை எம்எம்ஏ ஏற்பாடு செய்திருந்தார். அதற்கான தனது அலுவலகத்தில் கருத்துப் பெட்டி ஒன்றை அவர் வைத்தார்.
இதனால் குஷியான நாகை தொகுதி மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க அலுவலகம் வந்து கருத்துப் பெட்டியில் தங்களது விருப்பத்தை எழுதி போட்ட வண்ணம் இருந்தனர். நேரம் நேரம் அதிகரிக்க அதிகரிக்க கூட்டம் அதிகமாக கூடியது.
இந்நிலையில், திடீரென்று கருத்து கேட்பு நிறுத்தப்பட்டது. எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்த தமிமுன் அன்சாரி எம்எல்ஏவும் அலுவலகத்தில் இருந்து எழுந்து சென்றுவிட்டார். பின்னர், கூடி இருந்த கூட்டத்தை அகற்றிய போலீசார் அலுவலகத்தை பூட்டினார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு நாகை தொகுதியில் வெற்றி பெற்றவர். அதிமுகவில் இப்படி ஒரு இக்கட்டான சூழல் இருக்கும் போது, மக்கள் கருத்தை கேட்க விரும்பிய அவரை யார் மிரட்டினார்கள்? எதற்காக அவர் பாதியில் கருத்துக் கேட்பை நிறுத்திவிட்டு புறப்பட்டார் என்பது குறித்து ஏமாற்றத்துடன் திரும்பிய நாகை தொகுதி மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மக்கள் கருத்துக் கேட்பு பாதியில் நிறுத்தம்… தமிமுன் அன்சாரியை மிரட்டியது யார்?
Reviewed by மறத்தமிழன்
on
February 13, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.