Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 1, 2017

உண்மையில் அரியலூர் நந்தினிக்கு என்ன நடந்தது ? தேச பக்தர்களின் ருத்ர தாண்டவம்


அரியலூர் மாவட்டம் செந்துரை வட்டம் சிறுகாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்- ராஜகிரி ஆகியோரின் மகள் நந்தினி (16). இவர் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். குடும்பச் சூழல் காரணமாக படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு செந்துரையில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

நந்தினிக்கும் கீழமாளிகை வடக்கு தெருவில் வசிக்கும் ராமசாமியின் மகனும் இந்து முன்னணியின் ஒன்றியச் செயலாளருமான மணிகண்டன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

செந்துரை பகுதியில் கடந்த ஆண்டு மணிகண்டன் கொத்தனார் வேலை செய்துவந்தபோதுதான் நந்தினிக்கும் மணிகண்டனுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இந்நிலையில்தான் நந்தினி கருவுற்றிருக்கிறார். தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி மணிகண்டனை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், மணிகண்டனுடைய அட்டூழியங்கள் அந்த பகுதியில் பிரபலமானவை.
இந்து முன்னணி நிர்வாகியான இவன் பொது இடத்தில் வன்முறை செய்வதில் தொடங்கி அனைத்து வகையான அத்துமீறல்களையும் செய்யக்கூடியவன்.
பொதுக்கூடங்களில் புகுந்து கலவரம் செய்த வழக்கெல்லாம் இவன் மீது உண்டு.
இந்நிலையில் நந்தினியை உடல்தேவைக்காக மட்டுமே பயன்படுத்த நினைத்த இவன், கருத்தரித்ததை வைத்து திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய அவள் பிரச்சனையை அவனது பாணியிலேயே முடிக்க விரும்பினான்.
கடந்த டிசம்பர் 29 ஆம் தேதியன்று பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராஜசேகரை சந்தித்து பேசி ஆலோசனை செய்தபின்பே நந்தினியை இவன் நன்பர்களோடு சேர்ந்துப்படி கடத்திச் சென்றதாக நந்தினி தரப்பில் அனைவரும் உறுதியாக கூறுகின்றனர்.

கடத்தப்பட்ட நந்தினியை மறைவிடத்தில் அடைத்து வைத்த மணிகண்டன் அவனது நன்பர்களான கீழமாளிகை திருமுருகன் (த/பெ அறிவழகன்), அயன்தத்தனூர் வெற்றிச் செல்வன் (த/பெ சீனிவாசன் ), மணிவண்ணன் (த/பெ செல்வராஜ்) ஆகியோருடன் நால்வராக இணைந்து நான்கு நாட்கள் கூட்டு வன்புணர்ச்சி செய்துள்ளனர். அதன் பின்னர் நடந்தது கொடுமைகளின் உச்சம்.. நந்தினியின் பிறப்புறுப்பை பிளேடால் கிழித்து உள்ளே கையை நுழைத்து வயிற்றில் இருந்த சிசுவை வெளியே எடுத்து, அதை நந்தினியின் துப்பட்டாவில் சுற்றி எரித்துள்ளனர்.
பின்னர் நிர்வாணமான நிலையிலேயே கொடுமை தாளாமல் இறந்துபோன நந்தினியின் உடலில் கல்லைக் கட்டி கிணற்றில் போட்டுள்ளனர்.

கடந்த ஜன.14 சனிக்கிழமையன்று கீழமாளிகை அருகே உள்ள ஒரு கிணற்றிலிருந்து துர்நாற்றம் வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சென்றுபார்த்தபோது, அங்கே நிர்வாண நிலையில் அழுகிய பிணமாக நந்தினி கண்டெடுக்கப்பட்டாள். உடனே தீயணைப்புப் படையினர் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு உடற் கூறாய்விற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு நந்தினியின் தாயார் வரவழைக்கப்பட்டு, இது நந்தினியின் உடல்தான் என அவரும் அடையாளம் காட்டியுள்ளார்..

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.