Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 26, 2017

“இளமையாக இருப்பதற்கு உதவும் பல் பாதுகாப்பு” – ஹெல்த் டிப்ஸ்


“இளமையாக இருப்பதற்கு உதவும் பல் பாதுகாப்பு” – ஹெல்த் டிப்ஸ்

ஒவ்வொரு மனிதனும் இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். ஆனால், அவன் முதுமையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றான். வயது செல்லாமல், தோல், முடி உதிராமல் என்றும் இளமையாக இருப்பதையே ஆசையாக கொண்டுள்ளான். அதற்காக, பல்வேறு முயற்சிகளையும், சிகிச்சைகளையும் செய்கின்றான்.

எவ்வாறெல்லாம் செய்தால், இளமையாக இருக்கலாம் என்று தினந்தோறும் யோசித்து செயல்படுகிறான். இவ்வாறு யோசித்து செயல்படும் மனிதன், தன்னுடைய முக தோற்ற அழகை சிந்திக்காமல் இருக்கிறான். அதில், முக்கியமானது தான் பல் பாதுகாப்பு என்பதை மறந்து விடுகின்றான்.

சர்க்கரை, ஆஸ்துமா, ரத்தக்கொதிப்பு, இருதய, மூளை சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீர் பிரச்சினைகள் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க கூடாது என்று அதிக கவனம் செலுத்தும் மனிதன், இதுபோன்று ஆரம்ப கட்டத்திலேயே பற்களுக்கும் கவனம் செலுத்துவது கிடையாது.

பற்களில் வலி வந்தவுடன் பல் மருத்துவரை அணுகும் நிலை மாற்றி, குழந்தை பருவத்தில் அதன் முக்கியத்துவத்தை அறிந்து, பற்களை பாதுகாத்தால் என்றும் இளமைமிக்க பற்களோடு வாழலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்குகின்றனர்.

பற்களை பாதுகாத்து கொள்ள எளிதான ஒரு சில வழிகளைப் பார்ப்போம்.

1. தினந்தோறும் இருமுறை பல் துலக்க வேண்டும்.

2. வாய் கொப்பளிக்கும் மருந்து உபயோகப்படுத்துதல்.

3. பல் இடுக்குளில் உள்ள உணவுகளை அகற்ற டெண்டல் பிளாஸ் ( Dental floss ) உபயோகப்படுத்துதல்.

4. முக்கியமாக 6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுதல்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.