Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 11, 2017

ஜெயலலிதா ஆன்மா மாஃபா பாண்டியராஜன் மனசாட்சியை உசுப்பிவிட்டதோ?


எனக்கு வாக்களித்தோரின் ஒட்டு மொத்த குரலுக்கும் முக்கியத்துவம் தருவேன் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

வாக்காளர்களின் எண்ணங்களை கேட்டு, அவர்களின் ஒட்டுமொத்த குரல்களுக்கு மதிப்பளித்து முடிவெடுப்பேன் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். ஜெயலலிதா அதிமுகவின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு முடிவு எடுப்பேன் மாஃபா பாண்டியராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும் சசிகலா பக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அம்மாவின் ஆன்மா எம்எல்ஏக்களின் மனச்சாட்சியை உசுப்பும் என்று கூறி நம்பிக்கையுடன் இருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.


இளைஞர்கள், அதிமுக தொண்டர்கள், மாணவர்கள் என பெரும்பாலோனோர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தற்போதய அரசியல் சூழ்நிலை பற்றி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இன்று தனது பதிவில் வாக்காளர்களின் ஒட்டு மொத்த குரலுக்கும் முக்கியத்துவம் தருவேன் என்றும் ஜெயலலிதா வலியுறுத்திய ஒற்றுமையை கருத்தில் கொண்டு முடிவு எடுப்பேன் என்று கூறியுள்ளார். மக்கள், தொண்டர்களின் கருத்துக்கு செவி சாய்ப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மாஃபா பாண்டியராஜனின் செல்போனுக்கு தினசரியும் ஆவடி தொகுதி வாக்காளர்கள் போன் செய்து ஓபிஎஸ்க்கு ஆதரவு கொடுங்கள் என்று கூறி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.