Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 23, 2017

சசிகலாவை பதவியேற்க அழைக்காதது ஏன்?- மனம் திறந்தார் ஆளுநர்


சசிகலாவுக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்காதது ஏன் என்று  தமிழக ஆளுநர்  வித்யாசாகர் ராவ் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து, ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் பேட்டியளித்தபோது கூறியதாவது:
45 ஆண்டுக்கால எனது அரசியல் வாழ்கையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் அண்மையில், தமிழகத்தில் நடைபெற்ற அசாதாரண அரசியல் சூழ்நிலையால், மிகப்பெரிய அளவில் நான் விமர்சனத்துக்கு ஆளானேன்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவை தமிழக முதல்வராக நான் பதவிப்பிரமாணம் செய்து வைக்காததற்கான காரணத்தை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதி செய்தது.

அண்மைக்கால தமிழக அரசியல் சூழ்நிலைகளின்போது, நான் எடுத்த அனைத்து முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சசிகலாவைப் பொறுத்தவரை, அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல. அவரை சட்டமன்றக் கட்சித்தலைவராக அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை விரைவில் வழங்கவிருப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

அதுபோன்ற சூழ்நிலையில், சசிகலாவுக்கு முதல்வர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பது தொடர்பாக, எந்த முடிவையும் எடுக்கும் முன், உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருப்பது நல்லது என்று எனக்குத் தோன்றியது.

தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,   சட்ட நிபுணர்கள் சோலி சொராப்ஜி, கே. பராசரன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினேன். அந்த ஆலோசனைகள் பற்றிய முழுவிவரங்களையும் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு அறிக்கையாக அனுப்பி வைத்தேன். அந்த அறிக்கை குறித்து என்னால் எதுவும் கூற முடியாது.

உடல்நலக் குறைவால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க ஓரிருமுறை செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்படி ஒருமுறை நான் சென்றபோது, தான் குணமடைந்து வருவதைக் குறிக்கும் வகையில், ஜெயலலிதா தனது கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.