Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 26, 2017

வாரணாசியின் மறுபக்கம், சிறுமிகளை குறி வைக்கும் விபச்சார கும்பல்! அதிர்ச்சி ரிப்போர்ட்!


வாரணாசி என்றதும் நமக்கு அங்குள்ள கோவில்கள், சாமியார்கள் மற்றும் சுற்றுலா பகுதி ஆகியவை நமது ஞாபகத்துக்கு வரும் வரும். ஆனால் இதையெல்லாம் தாண்டி அதிர்ச்சி தரும் ஒரு செய்தியை உங்களுக்கு பதிவிடுகிறோம்.
இந்தியாவில் வாரணாசி மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலமாக விளங்குகிறது. இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் உள்ள ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் வாரணாசியில் உள்ள காசியில் சென்று நீராடினால் புனிதமடைவதாக கருதுகின்றனர்.
வாரணாசிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால் அவர்களுக்கான தேவையும் அதிகமாகவே காணப்படுகிறது.
வாரணாசியை எப்படி புனித ஸ்தலமாக கருதுகிறார்களோ? அதே வாரணாசியில் இளம் பெண்கள், பிறந்த பெண் குழந்தைகள் என்று கடத்தி வந்து விபச்சாரத்திற்கு தள்ளப்படும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
விபச்சாரத்திற்காக கடத்தப்படும் பெண் குழந்தைகள் நேராக சிவப்பு விளக்கு பகுதிக்கு கொண்டு செல்லப்படாமல், தனியாக வேறு ஒரு இடத்தில் அடைத்து வைக்கப்படுகின்றனர்.
பின்னர் அந்த பெண் குழந்தைகள் கூட்டு பலாத்காரம் செய்யப்படுகின்றனர். கொடுமைப்படுத்தப்படுகின்றனர். மின்சார ஷாக்கும் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பிறந்து பல மாதங்களே ஆன பெண் குழந்தைகள் கடத்தி கொண்டு போய் விடுகின்றனர். இந்தக் குழந்தைகளுக்கு ஹார்மோன் ஊசி மற்றும் ஹார்மோன் மாத்திரைகளை கொடுக்கின்றனர்.
விரைவில் இந்தப் பெண் குழந்தைகள் வளருவதற்காக இதுபோன்று ஊசி மற்றும் மருந்துகளை கொடுக்கின்றனர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் குறித்து ”குடியா” என்ற பெயரில் ஒரு குறும்படம் வீடியோ பதிவாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெண்கள் எவ்வாறு கடத்தி வரப்படுகின்றனர். கடத்தி வரும் பெண்களை என்ன செய்கின்றனர். அவர்கள் சந்திக்கும் அவலங்கள் என்ன? என்பது குறித்து சிலர் தங்களது கருத்துக்களை அந்த வீடியோ பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்தியில் இருக்கும் அந்த வீடியோ பதிவையும் இங்கே கொடுத்து இருக்கிறோம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.