February 21, 2017
இந்திய விஞ்ஞானிகள் “மாடு மேய்ப்பவர்கள்” – அமெரிக்காவுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா பொளேர் !
கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய விஞ்ஞானிகளை கார்ட்டூன் மூலம் கிண்டலடித்த அமெரிக்க பத்திரிக்கைக்கு, அதே கார்ட்டூன் மூலம் தற்போது டைம்ஸ் ஆப் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கை, கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பியது குறித்து,“மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் விண்கலம் விடுகிறார்கள்” என்று கார்ட்டூன் வெளியிட்டது. இந்த கார்ட்டூனுக்கு இந்தியாவின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தியா சமீபத்தில் உலக சாதனை நிகழ்வாக 104 செயற்கை கொள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணில் ஏவியது . இதில் எட்டு செயற்கை கோள்கள் அமெரிக்காவுக்கு சொந்தமானது. இதனை குறிக்கும் வகையில் டைம்ஸ் ஆப் இந்தியா தற்போது ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது.
அதில் “மாடு மேய்ப்பவர்களான இந்தியர்களிடம் தான் அமெரிக்கர்கள் தங்களது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துமாறு வேண்டி கொண்டனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிலடியை இந்தியர்கள் அனைவரும் ரசித்து வருகின்றனர்.
இந்திய விஞ்ஞானிகள் “மாடு மேய்ப்பவர்கள்” – அமெரிக்காவுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா பொளேர் !
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 21, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.