February 3, 2017
எண்ணூரில் பரவிய கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் கல்லூரி மாணவர்கள்
எண்ணூர் கடல் பகுதியில் கலந்த கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சரக்கு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேறி, கடலில் கலந்தது. எண்ணெய் கசிவு எண்ணூர் துறைமுகத்திலிருந்து திருவான்மியூர் வரை பரவியுள்ளது. இதனால் கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது. இதையடுத்து எண்ணெய் கசிவை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் எண்ணெய் கசிவை அகற்றும் பணியில் ஏரளானமான கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக எண்ணெய் கசிவை அகற்ற தன்னார்வலர்கள் தேவை என சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதற்காக 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தாங்களாகவே எண்ணூர் கடற்கரைக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்தது எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறுகையில் “இளைஞர்கள் அதிக அளவில் வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் எண்ணூரில் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அரசும் உதவிகளை செய்து வருகிறது. பணி செய்ய விரும்புவோர் யாரையும் தொடர்பு கொள்ளத் தேவையில்லை. அதிகம் பாதிக்கப்பட்ட எர்ணாவூர் விவேகானந்தா நகர், எண்ணூர் கடற்கரை பகுதிகளுக்கு தாங்களே சென்று பணியில் ஈடுபடலாம்” என்றார்.
இதனிடையே திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் எண்ணெய் கசிவை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளது. தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் எண்ணெய் கசிவை அகற்றும் பணியில் நேற்று 6-வது நாளாக தொடர்ந்து ஈடுபட்டனர். மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரையில் திட்டு, திட்டாக படிந்துள்ள எண்ணெய் படலங்களை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 300 பேர் நேற்று காலை முதல் அகற்றினர்.
இந்நிலையில் எண்ணூர் கடல் பகுதியில் நீரில் கலந்துள்ள கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைச்சர் பெஞ்சமின், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
எண்ணூரில் பரவிய கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் கல்லூரி மாணவர்கள்
Reviewed by மறத்தமிழன்
on
February 03, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.