February 15, 2017
டி.டி.வி. தினகரனுக்கு எதிர்ப்பு.. அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ராஜினாமா
அதிமுக துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து கருப்பசாமி பாண்டியன் ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுக அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து கருப்பசாமி பாண்டியன் ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுக துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார். அதேநேரம், புயல் பிரச்சினை, குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டு தெரிவித்த கருப்பசாமி பாண்டியன், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமையிடமிருந்து அழைப்புவந்தால் அதுகுறித்து பரிசீலிப்பேன் என்றும் தெரிவித்தார். ஆதரவாளர்களுடன் கலந்துபேசி அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் கருப்பசாமி பாண்டியன் தெரிவித்தார்.
டி.டி.வி. தினகரனுக்கு எதிர்ப்பு.. அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ராஜினாமா
Reviewed by மறத்தமிழன்
on
February 15, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.