Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 17, 2017

ஓட்டுப் போட்ட என் கையை வெட்டிக்கொள்வேன்: தமிழ் நடிகன் சிம்பு ஆவேசம்


தமிழக மக்களுக்கு ஒரு  ஐந்து கேள்விகள் முன் வைப்பதாக நடிகர் சிம்பு ஒரு அறிக்கை விட்டுள்ளார்.
கேள்வி 1
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்,  இந்த 75 நாட்களில் ஒருமுறைகூட  ஊடகங்களை சந்திக்காத குற்றவாளி சசிகலா கடந்த  இரண்டு நாட்களில் மட்டும் 75 தடவைக்கும் மேலாக ஊடகங்களை சந்திப்பதற்காக நோக்கம் என்ன???
கேள்வி  2
முதல்வர் பன்னீர்செல்வம் கையை வெட்டுவேன் என கலையரசன் சொல்கிறார். தங்களுக்கு அரசியல் நாகரீகம் தான் தெரியாது என்று நினைத்தோம். ஆனால் தனிமனித ஒழுக்கம் கூட தெரியாமல் போய் விட்டதா?
உண்மையில் உங்களுக்கு வாக்களித்த நாங்கள் தான் எங்களின் கைகளை வெட்டிக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் என் கையை வெட்டிக் கொள்வேன்.
கேள்வி 3
ஆளுனர் பதவி ஏற்க அழைக்கும் வரை கூவத்தூர் விடுதியை விட்டு வெளியேற மாட்டோம். உண்ணாவிரதப் பேராட்டம் கூட இருப்போம் என்று கூறியுள்ளார் நவநீத கிருஷ்ணன். இதே நிலைப்பாட்டை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் ஏன் எடுக்கவில்லை ???
கேள்வி 4
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திரு. பன்னீர்செல்வம் அவர்களை ஏற்றுக்கொள்ளாத MLA க்கள் , குற்றவாளி சசிகலா அடையாளம் காட்டும் அவரது குடும்ப உறுப்பினர்களை  ( அம்மா அவர்களால் விரட்டி அடிக்கப்பட்டவர்கள் ) ஏற்றுக்கொள்வது ஏன்? ??
கேள்வி 5
கூவத்தூர் விடுதியில் தங்கி இருக்கும் MLA க்களுக்கு வெட்கம், மானம், சூடு, சுரணை மற்றும் மனசாட்சியே இல்லையா? ??
மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்,உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். எனக்கு மெயில் பண்ணுங்கள் என்கிறார் நடிகர் சிம்பு.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.