February 8, 2017
பரபரப்பான அரசியல் சூழல்.. தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகை
மும்பையில் தங்கியிருக்கும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை பிற்பகல் சென்னை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக பதவியேற்க ஆயத்தமாகி வருகிறார். பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டிய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், திடீரென உதகையிலிருந்து டெல்லி கிளம்பி சென்றார். நேற்று முன்தினம் டெல்லியிலிருந்து அப்படியே, மும்பை சென்றுவிட்டார். இதனால் மன்னார்குடி கோஷ்டி அதிர்ச்சியடைந்தது.
இதனிடையே நேற்று இரவு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மவுன புரட்சி செய்தார். அதன் பின்னர் அவர் அளித்த பேட்டி தமிழக அரசியலையே புரட்டி போட்டது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியை பறித்தார் சசிகலா.
இதனால் தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை பிற்பகல் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் இருந்து நண்பகல் 12 மணிக்கு சென்னை புறப்படுவதாக கூறப்படுகிறது. தமிழக அரசியலில் குழப்பம் நிலவுவதால் ஆளுநர் வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழல்.. தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகை
Reviewed by மறத்தமிழன்
on
February 08, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.