Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 4, 2017

பன்றி இறைச்சி ஏன் சாப்பிடக்கூடாது? அதில் உள்ள ஆபத்துகள் என்ன


பன்றி இறைச்சியை உண்பதால் 70 விதமான, சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பது அறிவியல் ரீதியாகவே நிரூபணமாகியுள்ளது. பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதனால் , ஆபத்துகள் அதிகம் என்று கூறப்படுகின்றது.

அது சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் “டேனியா சோலிய‌ம்” Taenia solium (pork tapeworm) என்ற‌வொரு நாடாப்புழு உருவாகின்றது.

இது மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. அது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை முற்றிலுமாக இழக்கக்கூடிய நிலை ஏற்படுகின்றது.

இதயத்தைச் சென்றடைந்தால் மாரடைப்பு உண்டாகிறது, கண்களைச் சென்றடைவதால் கண்பார்வையை இழக்கிறான், ஈரலைச் சென்றடைந்தால் ஈரல் பாதிக்கப்படுகிறது.

இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உறுப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.

அதுமட்டுமின்றி பன்றி இறைச்சியில் திரிசுரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயருடைய மற்றுமொரு ஆபத்தான குடற்புழு உள்ளது, இந்த குடற்புழு டேனியா சோலிய‌ம் குடற்புழுவுக்கு ஒப்பானது. இதற்காகவே பன்றி இறைச்சி சாப்பிடக்கூடாது என வாதிடுகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.