Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 21, 2017

‘கட்டாய செக்ஸ்’ – சிறையில் சிக்கித் தவிக்கும் சசி, இளவரசி! அய்யோ?


ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கடந்த 14ம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதில் ஜெயலலிதா இறந்து விட்டதால், அவரை வழக்கிலிருந்து விடுவித்து, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும். மேலும் அபராதமும் கட்ட வேண்டும்.
இந்த தீர்ப்பையடுத்து, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில், நீதிபதி அஷ்வத் நாராயணா முன்னிலையில் ஆஜராகி சரணடைந்தனர். இதனையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிறைத்துறை டிஐஜி ககன்தீப் சிங் கடந்த அக்டோபர் 28ம் தேதி அளித்த அறிக்கையின்படி, பரப்பன அக்ரஹாரா சிறையில் 15 பெண் கைதிகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், 3 பெண் கைதிகள் சாதாரண சிறைத்தண்டனையும் அனுபவித்து வருகின்றனர்.
விசாரணைக் கைதியாக 89 பேரும், இளம் குற்றவாளிகளாக (19 வயதிலிருந்து 20 வயது வரை) 4 பேரும், போதை குற்றங்களுக்காக 8 பேரும், வெளிநாட்டு பெண்கைதிகள் 12 பேர் உள்ளிட்ட 131 பெண் கைதிகள் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் உள்ளனர்.
இந்த சிறைச்சாலை குறித்து, ஒரு இணையதள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்த சிறைச்சாலையில் செக்ஸ் தொல்லைகளும் பல்வேறு கொடுமைகளும் நடப்பதாக அங்குள்ள பெண் கைதிகள் கர்நாடக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர். குறை தீர்க்கும் பெட்டியில் இருந்து இவ்வாறு 2 கடிதங்களை நீதிபதிகள் எடுத்து உள்ளனர். அந்த கடிதங்கள் மற்றும் பிரதிகள் விரைவு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.
அதில் கர்நாடகா தலைமை நீதிபதியின் முகவரி கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் அவர் தலையிட்டு பெண் கைதிகளை கொடுமையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. ஒரு கடிதத்தில் ஆண் கைதிகளிடம் லஞ்சம் பெறும் வார்டன்கள் மற்றும் சிறை அதிகாரிகளின் பெயர்கள் கொண்ட பட்டியல் இடம்பெற்று உள்ளது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அந்த கடிதங்களை கர்நாடக ஐகோர்ட் பரப்பன அக்ரஹார சிறைசாலைக்கு அனுப்பி வைத்து உள்ளது.
கன்னட மொழியில் எழுதப்பட்டு உள்ள அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:- பெண் கைதிகளிடம் இருந்து அனைத்தும் அபகரிக்கப்படுகின்றன. கைதிகளை உறவினர்கள் முறைப்படி சந்திக்க வந்தாலும் அவர்களிடம் இருந்து ரூ.200 முதல் ரூ.300 வரை வசூலிக்கப்படுகிறது. அதிகாரிகளை பணம் இல்லாமல் அணுக முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. நாங்கள் கொடுக்க முடியாது என்றால் அவர்கள் எங்களை பார்த்து. நாய்போல் கத்துவார்கள் எங்களை எங்கள் உறவினர்களை பார்க்க அனுமதிப்பது இல்லை.
மேலும் உறவினர்கள் கொண்டுவரும் பொருட்களில் சரிபாதி வார்டன்களுக்கு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் அதை எல்லாம் வெளியே தூக்கி வீசி விடுவார்கள். வார்டன்கள் பெண்களை அவமானபடுத்துகிறார்கள். அவர்கள் நீங்கள் சிறையில் இருக்கிறீர்கள். நல்ல உணவு, அழகாக உடை உடுத்துவது என எதிர்பார்க்க கூடாது என கூறுகின்றனர். எல்லாத்தையும் நீங்கள் அனுபவிப்பது என்றால்? உங்கள் தண்டனைக்கு என்ன பொருள் என அதிகாரிகள் கூறுகின்றனர். மூத்த அதிகாரியிடம் குறைகளை கூறினால். உங்கள் குறைகளை கேட்க இங்கு வரவில்லை என கூறுகிறார்.
வார்டன்கள் 2 சிறைக்கதிகளுக்கு சட்டவிரோதமாக மொபைல் போன் வைத்திருக்க அனுமதித்து உள்ளனர். ஒருவர் கணவனை கொலைசெய்த மனைவி, மற்றொருவர் ஆங்கிலம் பேசும் கைதி. மற்ற கைதிகள் மொபைல் போன் கேட்டால் மொபைல்போன் பயன்படுத்த அதிகாரிகளூக்கு பணம் கொடுத்து இருப்பதாக கூறுகிறார்கள். பணம் இருந்தால் அனைத்தும் அனுபவிக்க முடியும் என கூறுகின்றனர். இதை உயரதிகாரிகளிடம் தெரிவித்தால் அவர்கள் பரோலில் செல்லும் வாய்ப்பை கெடுத்துவிடுவதாக கூறுகிறார்கள்.
இவ்வாறு அந்த இணையதள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.