Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 9, 2017

அதிமுக உட்கட்சி மோதலின் பின்னணியில் பாஜக தலைவர்கள்....சு.சுவாமி பொளேர் ஒப்புதல் வாக்குமூலம்


அதிமுக உட்கட்சி மோதலின் பின்னணியில் சில பாஜக தலைவர்கள் இருப்பதாக அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி அதிரடி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதிமுக உட்கட்சி மோதலுக்கு சில பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள்தான் காரணம் என அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி அதிரடியாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலரான சசிகலா முதல்வர் பதவியை கபளீகரம் செய்ய இருக்கிறார். இதற்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கினார்.


ஓபிஎஸ் மறுப்பு
இதையடுத்து திமுகவின் பின்னணியில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செயல்படுவதாக சசிகலா குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் திமுகவோ, பாஜக தமக்கு பின்னால் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

சசிக்கு சு.சுவாமி ஆதரவு
அதேநேரத்தில் சசிகலாவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்து வருகிறார். இதே சுப்பிரமணியன் சுவாமிதான் ஜெயலலிதா, சசிகலா சிறைக்கு செல்ல காரணமான சொத்துகுவிப்பு வழக்கையும் தொடர்ந்தவர்.

பின்னணியில் பாஜக தலைவர்கள்
தற்போது, தமிழக அரசியல் குழப்பங்களின் பின்னணியில் பாஜக தலைவர்கள் சிலர் இரு அணிகளின் பின்னணியிலும் இருக்கிறார்கள் என புது அணுகுண்டை வீசியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. அதே நேரத்தில் பாஜக தலைமையோ மத்திய அரசோ இந்த விவகாரத்தில் தலையிடவில்லை. பாஜக தலைவர்கள் சொந்த ஆதாயங்களுக்காக தலையிடுகிறார்கள் என கூறியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

ஆளுநரை நீக்க வேண்டும்
அத்துடன் தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடனே நீக்க வேண்டும்; இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன் எனவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.