Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 28, 2017

மொபைல் திருட்டு சம்பவம் – கொதிக்கும் எண்ணெயில் சிறுவர்களை கைவிட துன்புறுத்திய நபர்!


மொபைல் திருட்டு சம்பவத்தில், உண்மையை நிரூபிக்க சிறுவர்களை கொதிக்கும் எண்ணெயில் கை விட வைத்ததால், 3 பேர் படுகாயமடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் நர்சிங்பதா கிராமத்தைச் சேர்ந்த சஹான் லால் வரியவ் என்பவரின் 13 வயது மகனின் செல்போன் திடீரென காணாமல் போனது.
இதனையடுத்து தனது மகனின் 5 நண்பர்களிடம் வரியவ் விசாரித்தப்போது, அவர்கள் யாரும் செல்போனை எடுக்கவில்லை என்று கூறினர். இருப்பினும் உண்மையை கண்டறிய வரியவ், ஒரு விபரீத முயற்சியில் ஈடுபட்டார். கொதிக்கும் எண்ணெயில் சிறுவர்களை கைவிடசொன்னால், உண்மை தெரிந்துவிடும் என்று முடிவு செய்து சிறுவர்கள் 5 பேரையும் வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அங்கு கொதிக்கும் எண்ணெயில் அவர்களை கைவிட கூறியுள்ளார். அவர்கள் செல்போனை எடுக்கவில்லை என்று எடுத்துரைத்தும் வரியவ் ஏற்று கொள்ளவில்லை. பின்னர் சிறுவர்களை கட்டாயப்படுத்தி, அவர்களை கொதிக்கும் எண்ணெயில் கைகளை விட வைத்துள்ளார்.
இதில் சிறுவர்கள் வலியால் துடித்ததில், சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக, காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வரியவ் கைது செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.