February 15, 2017
வேண்டாம் என் வாயைக் கௌராத,கேப்டன் ஸ்டைலில் கடுப்பான வைகோ..!
தமிழகத்தில் நிலவிவரும் அசாதாரண அரசியல் சூழ்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரை நட்சத்திரங்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எப்பொழுதுமே அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கிவரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதுகுறித்து எந்த கருத்தும் கூறாமல் சொந்த ஊரில் கருவேல மரங்களை ஒழிக்கும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து, தான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. தற்போது என்ன பேசினாலும் அது சரியாக இருக்காது என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
வேண்டாம் என் வாயைக் கௌராத,கேப்டன் ஸ்டைலில் கடுப்பான வைகோ..!
Reviewed by மறத்தமிழன்
on
February 15, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.