Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 27, 2017

டொனால்டு டிரம்புக்கு பதிலடி கொடுத்த பிரான்ஸ்!


அமெரிக்காவை விட பிரான்சில் துப்பாக்கி கட்டுப்பாடு நடவடிக்கைகள் பலமாக உள்ளது என டிரம்புக்கு பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டே பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில், என் நண்பர் ஒருவர் பாரிஸ்க்கு வருடா வருடம் சுற்றுலா போய் வருவார். சில வருடங்கள் கழித்து நான் அவரை சந்தித்தேன்.
அப்போது அவரிடம், தற்போது பாரிஸ் எப்படி இருக்கிறது என கேட்டேன். அதற்கு அவர் நான் அங்கு போய் 5 வருடங்கள் ஆகி விட்டது என என்னிடம் கூறினார்.
தீவிரவாத அச்சுறுத்தலால் அவர் அங்கு செல்வதில்லை என்பதை அவர் அப்படி குறிப்பிட்டார் என டிரம்ப் கூறியிருந்தார்,
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டே தன் கருத்தை கூறியுள்ளார்.
அதில், கடந்த சில மாதங்களாக அமெரிக்காவிலிருந்து அதிகம் பேர் பிரான்ஸ் வருகிறார்கள்.
பிரான்சில், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எடுத்த கடும் முயற்சியால் தான் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.
பிரான்ஸில் ஆயுதங்களோடு யாரும் மக்கள் கூட்டத்தில் நுழைவதில்லை. அமெரிக்காவை விட பிரான்ஸில் துப்பாக்கி கட்டுப்பாடு நடவடிக்கைகள் நன்றாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.