Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 4, 2017

என்னோட முதல் வெற்றிடா: தீர்ப்பு என் பக்கம் பீட்டா விஷால் பார்ட்டி வைத்து கொண்டாட்டம்


என்னோட முதல் வெற்றிடா தீர்ப்பு என் பக்கம்டா விஷால் பார்ட்டி வைத்து கொண்டாட்டம்.
தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷாலை தற்காலிக நீக்கம் செய்துள்ளதை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இதற்கு ஒரு நாள் அவகாசம் அளிப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பத்திரிகைப் பேட்டியில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை தவறாகப் பேசியதாகக் கூறி, நடிகர் விஷாலை சஸ்பென்ட் செய்வதாக தயாரிப்பாளர் சங்க அவசரக் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் விஷால்.
இந்த வழக்கில் முதலில் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவு சரியானதுதான் என்று அறிவித்தது நீதிமன்றம்.
பின்னர் வழக்கை விசாரித்த பிறகு, “விஷால் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை தயாரிப்பாளர் சங்கம் தானாக முன் வந்து ரத்து செய்ய வேண்டும். விஷால் கூறிய கருத்தை மிகைப்படுத்தி புரிந்து கொண்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.
ரத்து செய்யவில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். இதற்கு ஒரு நாள் கெடு விதிப்பதாக” உத்தரவிட்டுள்ளது. இது ஒன்று போதாதா ?
பீட்டா விஷாலுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடுகிறார். இனி என்னை என்னடா பண்ணுவீங்க எனபது போலத் தான் இருப்பார் என்கிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.