Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 14, 2017

பொது வாழ்க்கையில் இருப்போருக்கு இந்தத் தீர்ப்பு ஒரு நல்ல பாடம்- மு.க.ஸ்டாலின்


சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என தி.மு.க., சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அக்கட்சியின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, குறிப்பாக 21 வருடங்களுக்கு பின் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஊழல் செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா குற்றவாளிகள் என தீர்ப்பளித்து 4 ஆண்டுகால சிறை தண்டனை விதித்தார். ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அவர்கள் 4 பேரையும் விடுதலை செய்தார்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ், அமித்வாராய் ஆகியோர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டுகால சிறைத் தண்டனையை உறுதி செய்தனர். அத்துடன் 3 பேருக்கும் விதிக்கப்பட்ட ரூ10 கோடி அபராதத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

பொது வாழ்க்கையில் இருப்போருக்கு உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஒரு பாடமாகும். தமிழகத்தில் நிலையான ஆட்சி ஏற்பட ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண நிலையான ஆட்சி அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.