February 10, 2017
தமிழ் நாடே கொந்தளித்து கிடக்கும்பொழுது அங்கே எம்எல்ஏகள் மஜா மஜா.......
தாய்லாந்து அழகி மசாஜ்..! குத்தாட்டம்..! எம்எல்ஏகள் குழுவாக கூடி பஜனை செய்யுற இடம் மாற்றம்.!
இனி பிறந்தால் சசிகலா ஆதரவு எம்எல்ஏவாக பிறக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆசைப்படும் அளவு, சென்னையிலேயே இருந்து கொண்டு பாங்காக் சுகங்களை அனுபவித்து வருகின்றனா்.
சசிகலா எம்எல்ஏக்கள் கடந்த 2 நாட்களுக்கு மேலாக சென்னையில் இருப்பதை மறந்த நிலையில் உள்ளனா். இதில் அந்தந்த தொகுதி இளைஞர்கள், மாணவர்கள் எம்எல்ஏக்களை தேடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் வருகின்றனா்.
தொடா்ந்து அவர்களது செல்போனுக்கு தொடா்பு கொள்கின்றனா். ஆனால் யாருக்கும் செல்போன் தொடர்பு கிடைக்கவில்லை.
பல எம்எல்ஏக்கள், ஸ்னோகர்ஸ், வாட்டர் பைக் ரைடிங், தாய்லாந்து மசாஜ், ஆயில் மசாஜ், வெளிநாட்டு பிராந்தி, விஸ்கி, ஒயின் பல மாநில பெண்களுடன் குத்தாட்டம் ஆகியவற்றை அனுபவித்து வருகின்றனா்.
நாட்டுகோழி, இறால், மட்டன், போன்ற அனைத்துவகையான அசைவ சாப்பாடாகவும், சைவத்தில் இயற்கை உணவு பழங்களும் வழங்கி உபசரித்து வருகின்றனா் சசிகலா ஆட்கள்.
ஆண்கள் இங்கிலாந்து இளவரசன் போலவும், பெண்கள் இளவரசி போலவும் ஏகபோக சுகத்தை அனுபவித்து வருகின்றனா்.
இது குறித்து பத்திரிக்கையாளா்கள் வளா்மதியிடம் கேட்டபோது, அவா்கள் குழுவாக சுதந்திரமாக உள்ளனா். அவா்களை பன்னீர் செல்வத்திடம் இருந்து காபாற்றுங்கள் என்று அவா்களாக கேட்டதால்தான். நாங்கள் அவர்களை ஒன்றாக வைத்துள்ளோம் என்றார்.
இது குறித்து பேசிய வைகைச் செல்வனோ குழுவாக இருப்பது, விரும்பியதை சாப்பிடுவது ஒரு குற்றமா என்கிறார்.
ஓட்டு போட்ட மக்கள் அடுத்த வேளைக்கு உணவு இல்லாமல் தவித்து வருகின்றனா். சாலை வசதி இல்லை. மின் விளக்கு வசதியில்லை.
தண்ணீர் இன்றி விவசாயிகள் பயிர்கள் வாடியதைக் கண்டு சாகுகின்றனா். இந்த நிலையில் இவா்கள் அஜால், குஜால் செய்திகளை கேட்கும்போது ஓட்டு கேட்க வருவிங்கத்தானே, வாங்க அப்ப நாங்க பாத்துக்கிறோம் என்று கூறிவருகின்றனா்.
கூவத்தூா் மக்கள் சாலையில் நடந்து செல்லக்கூட அனுமதியில்லை. இதனை எதிர்த்து அந்த மக்கள் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனா்.
இதுதான் குழுவாக சோ்ந்து எம்எல்ஏக்கள் பஜனை செய்வதாம் இது பத்திரிக்கையாளா்களுக்கு தெரிந்து விட்டதால் இந்த கிராமத்தில் இருந்து 15 கிலோமீட்டா் அப்பால் உள்ள வில்லேஜ் ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் நாடே கொந்தளித்து கிடக்கும்பொழுது அங்கே எம்எல்ஏகள் மஜா மஜா.......
Reviewed by மறத்தமிழன்
on
February 10, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 10, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.