February 25, 2017
ஜெ. மரணம் குறித்து மர்மங்களை வெளியிட்ட டாக்டர் கைது! பரபரப்பு பின்னணி!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் சீதா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது, அங்கு டாக்டராக பணியாற்றியவர் சீதா.
ஜெ. மறைவிற்கு பிறகு, சில சர்ச்சையான கருத்துக்களை அவர் கூறியிருந்தார்.
மேலும், டாக்டர் சீதா, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து ஜெயலலிதா சிகிச்சை குறித்து பேசியிருக்கிறார்.
நிருபர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவை சிகிச்சைக்கு அழைத்து வந்தபோது இருந்த சூழல் குறித்து சில சர்ச்சைக்குறிய கருத்துக்களை அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவுடன் ரத்த உறவினர்கள் யாரும் வரவில்லை. அவருடன் தங்கும் நிலையில் யாரும் வரவில்லை. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு, வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.
டாக்டர்களைக் கூட அனுமதிக்கவில்லை. இதில் மர்மம் உள்ளது என்றும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியும் என்றும் டாக்டர் சீதா கூறியிருந்தார்.
இதுகுறித்து அப்பல்லோ நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார், டாக்டர் சீதாவை இன்று கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சீதாவிடம் சைபர் க்ரைம் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சீதா பெரம்பூரை சேர்ந்தவர் என்றும், அவர் மருத்துவரே இல்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ. மரணம் குறித்து மர்மங்களை வெளியிட்ட டாக்டர் கைது! பரபரப்பு பின்னணி!
Reviewed by மறத்தமிழன்
on
February 25, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 25, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.