Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 28, 2017

ஜெயலலிதா ஆவியின் விருப்பம் என்ற பெயரில் பாமக ராமதாஸ் புதுக்கதை!!


'
'நான் ஊழல் செய்துவிட்டேன். எனது தோழியும் சரியில்லை. ஆதலால், அன்புமணிதான் முதல்வராக வேண்டும்'' என்று ஜெயலலிதாவின் ஆவி கூறியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சேலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச வர்மா நூல் வெளியீட்டு விழாவில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ''நான் ஊழல் செய்துவிட்டேன். எனது தோழியும் சரியில்லை. ஆதலால், அன்புமணிதான் முதல்வராக வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆவி விரும்புகிறது. மேலும், தமிழகத்தில் அன்புமணி சொன்ன மாற்றம் வரத்தான் போகிறது.






தரம் இல்லாதவர்களை எல்லாம் தலைப்பு செய்தியில் போட்டு நாட்டை சீரழித்து விடாதீர்கள். பொறுப்புடன் ஊடகங்கள் நடந்து கொள்ள வேண்டும். நான் கட்சி துவங்கி 28 ஆண்டுகள் ஆகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்காகவும்தான் நான் உழைத்து வருகிறேன். எங்களை ஜாதிக் கட்சி என்ற முத்திரையை இனிமேலும் குத்தாதீர்கள். இந்த எடப்பாடி மற்றும் புன்னகை மன்னன் பன்னீர் செல்வம் ஆகியோர் அரசியலில் இருந்து ஒழியப் போகிறார்கள்'' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.