Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 14, 2017

எனது அரசியல் பிரவேசம் தொடங்கியது.. ஓ.பி.எஸ்ஸுடனான திடீர் சந்திப்புக்குப் பின் தீபா! - மறுபடியும் கர்நாடகமா!....


முதல்வர் ஓபிஸும் தானும் அதிமுகவின் இரு கரங்களாக செயல்படுவோம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.

தனது அரசியல் பிரவேசம் இன்று முதல் தொடங்குவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ. தீபா தெரிவித்துள்ளார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தானும் அதிமுகவின் இரு கரங்களாக செயல்படுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வ இன்று இரவு திடீரென ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அவர் அங்கு சென்று சேர்ந்த 5வது நிமிடம் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா அங்கு வந்து சேர்ந்தார்.

பின்னர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஜெ.தீபாவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து தீபா அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, எனது அரசியல் பிரவேசம் இன்று முதல் தொடங்குகிறத. நானும் முதல்வரும் அதிமுகவின் இருகரங்களாக செயல்படுவோம், என்றார்.
மேலும் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெ.தீபா, சசிகலா செல்ல வேண்டிய இடத்திற்கு செல்கிறார் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.