Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 14, 2017

சசிகலா, இளவரசி, சுதாகரனை "அன்போடு" வரவேற்கத் தயாராகும் பரப்பன அக்ரஹாரா சிறை!


சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அளித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்படுவார் என்பதால் அதற்காக சிறை அறைகள் தயாராகி வருகிறது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 21 ஆண்டுகளாக நடந்தது. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. அதில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கும 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 4 வாரத்தில் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹாராவில் அமைந்துள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே, கர்நாடக மாநிலத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இதே வழக்கில் நீதிபதி குன்ஹா ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் சிறை தண்டனை வழங்கிய போது, இதே பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் தான் அடைத்து வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.