February 25, 2017
ஜெயலலிதாவின் நிறைவேறாத ஆசை..!
ஜெயலிதா மறைவுக்கு பின்னர், அவர் இல்லாமல் இன்று அவரது முதல் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நிறைவேறாமல் போன அவரது கடைசி ஆசை என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கலைத்துறையில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து, பின்னர், எம்.ஜி.ஆரால் பொதுவாழ்வுக்கு அழைத்து வரப்பட்டவர் ஜெயலலிதா. தொடர்ந்து அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளையும், பதவிகளையும் வகித்துவந்த ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர், இரண்டாக பிளவுப்பட்டிருந்த அ.தி.மு.க.வை மீண்டும் ஒன்றாக இணைத்து, முடக்கி வைக்கப்பட்டிருந்த இரட்டை இலையையும் மீட்டார்.
தமது அரசியல் பயணத்தில் வெற்றிபெற்று ஆறுமுறை தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு புத்தகங்கள் மீது இருந்த காதல் அளப்பரியது.
அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இப்படியான ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. அதற்குள் அவர் உயிரிழக்க நேரிடும் என்பதை கனவிலும் எண்ணியிருக்க மாட்டார்
ஒரு நேர்காணலின் போது, தற்போது, முழு நேர அரசியல்வாதியாக இருக்கும் நீங்கள் ஓய்வுக் காலத்தை எப்படி கழிக்க வேண்டும் என்று ஏதாவது திட்டம் இருக்கிறதா என்று செய்தியாளர் கேட்டார். அதற்கு, ஒரு விவசாயியாக எனது இறுதிக் காலத்தை கழிக்க விரும்புகிறேன் என்றார்.
மேலும், எனக்கு ஐதராபாத்தில் சொந்தமாக ஒரு திராட்சை தோட்டம் உள்ளது. அங்கு சென்று தோட்டத்தை மேற்பார்வை செய்து, பண்ணை தொழில் செய்து வாழ விருப்பம் என்று கூறியிருந்தார்.
நாம் பிறந்தது மகிழ்ச்சியாக இருப்பதற்கும், உல்லாசமாக வாழ்வதற்கும் என்று நான் நம்பவில்லை.முந்தைய கர்மவினைப் பலனால் தான் ஒவ்வொருவரும் பூமியில் பிறக்கிறோம். மேலும், ஒவ்வொருவரும் உலகத்தில் நிறைவேற்ற வேண்டிய காரியம் என்று ஒன்று உள்ளது. நாம் அதைப்பற்றி அறிந்திருக்க முடியாது.
எனது நம்பிக்கையின்படி, மகிழ்ச்சியை அடைவதற்கு ஒருவர் மோட்சத்தை அடையவேண்டும். அதாவது மறுபிறவி என்பதே கூடாது என்கிற மோட்சதை அடைய வேண்டும் என்றும் தனது ஆசையையும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் நிறைவேறாத ஆசை..!
Reviewed by மறத்தமிழன்
on
February 25, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 25, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.