Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 16, 2017

சசிகலாவை வழியனுப்பி வைத்த 'பொர்க்கி' சாமி அடுத்து பழனிச்சாமிக்கு கொடி பிடிக்கிறார்!


சென்னை: சசிகலாவுக்கு ஆதரவாக டிவீட் போட்டுக் கொண்டிருந்த சுப்பிரமணியம் சாமி தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக டிவீட் போட ஆரம்பித்துள்ளார்.
சசிகலா இன்று சிறைக்குப் போக முக்கியக் காரணமே இந்த சாமி போட்ட சொத்துக் குவிப்பு வழக்குதான். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா ஆதரவாளராகவே மாறிப் போனார் சாமி. அவருக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்பையும் மீறி, சசிகலா சிறைக்குப் போய் விட்டார்.
இந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கிளம்பியுள்ளார் சாமி. எடப்பாடிக்கு ஆதரவாக ஒரு டிவீட் போட்டுள்ளார்.
அந்தடிவீட்டில், நான் உள்துறை அமைச்சரிடம் பேசினன்.
பழனிச்சாமியின் எம்.எல்.ஏக்களை கட்டாயாயமாக வெளியேற்றப் பார்க்கும் போலீஸாரைக் கண்டித்து தமிழ்நாடு டிஜிபியை எச்சரிக்குமாறு அவரிடம் வலியுறுத்தினேன் என்று கூறியுள்ளார் சாமி.

ஆமா, சாமி போன் பேசியது உள்துறை அமைச்சருக்குத் தெரியுமா.. இதை நாம் கேட்கவில்லை. அந்த டிவீட்டுக்குப் பதிலளித்து பலர் கலாய்த்துக் கேட்ட கேள்வி இது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.