February 17, 2017
முதல்வரே என்னை பார்த்து சிரித்து விடாதீர்கள் பதவி பறிபோய்விடும் : ஸ்டாலின்
இது வரை அமைந்துள்ள அதிமுக ஆட்சிகள் அனைத்துமே மக்கள் விரோத ஆட்சிகள் தான் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். ஓ.பன்னீர்செல்வத்தின் முதல்வர் பதவியை சசிகலா பறித்ததற்கான காரணத்தை சுட்டிக்காட்டி பேசிய ஸ்டாலின், நாளை கூடும் சட்டமன்ற கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை பார்த்து மரியாதை நிமித்தமாக சிரிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். முன்னதாக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள, ஸ்டாலினை பார்த்து சிரித்ததாக சசிகலா உள்ளிட்ட அவரது தரப்பினர் கடுமையாக விமர்சித்து வந்தனா். சசிகலா பேசும் போதும் அதற்காக தான் அவரை ராஜினாமா செய்ய சொன்னதாக மறைமுகமாக குறிப்பிட்டதும் நினைவு கூறத்தக்கது.
இந்நிலையில் நாளை கூட உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 125 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர். இதில் 9 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தால் அவரது அரசு கவிழும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வரே என்னை பார்த்து சிரித்து விடாதீர்கள் பதவி பறிபோய்விடும் : ஸ்டாலின்
Reviewed by Admin
on
February 17, 2017
Rating: 5
Reviewed by Admin
on
February 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.